பதவி முக்கியமல்ல, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிதான் முக்கியம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் மாநாட்டில் மத்திய அமைச்சர் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 62வது ஆண்டு நிறைவையொட்டி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவர் மேலும் பேசியதாவது, மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. அந்த மசோதா வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அதற்காக என்னை புதுதில்லியிலேயே தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆனால், நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்துவிட்டேன். இதனால் பதவி போனாலும் பரவாயில்லை, மக்களிடம் கொடுத்த வாக்குறுதி தவறக் கூடாது என இங்கு வந்துள்ளேன். எனக்கு பதவி பெரிதல்ல. எனது தந்தையின் மீது உங்களுக்கு இருக்கும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியானது முஸ்லீம் சமுதாயத்திற்கு உழைத்து வருகிறது. இந்த கட்சிக்கும், திமுகவுக்கும் உள்ள உறவு மிகவும் பழமையானது.
1967-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் முஸ்லிம் லீக் கட்சிக்கும் பங்கு உண்டு. திமுகவுக்கும், முஸ்லிம் லீக் கட்சிக்கும் உள்ள உறவைப் போலவே எங்கள் குடும்பத்திற்கும், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் குடும்பத்திற்கும் இடையிலான உறவும் நீடித்து வருகிறது.
திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எனக்கு எல்லா இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் காயல்பட்டினத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை போல வேறு எங்கும் இல்லை. முதல்வர் கருணாநிதி நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டபோது அவருக்கு காயல்பட்டினத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை நான் நேரில் கண்டேன். திமுக மீது முஸ்லீம்கள் கொண்டுள்ள நட்பும், அன்பும் என்றும் மறக்க முடியாதது என்றார் அண்ணன் அழகிரி.

மாநாட்டில், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.டி. சம்சுல், மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், சிறந்த கல்வியாளருக்கான விருது கீழக்கரை செய்யது அப்துல்காதருக்கும், சிறந்த சமூக சேவையாளர் விருதை எம்.கே.எம். முஹம்மது ஷாபிக்கும், சிறந்த இலக்கியவாதி விருது எம். அப்துல் ரஹ்மானுக்கும், தீன்சுடர் நாவலர் விருது முகம்மது இலியாஸýக்கும், சிறந்த செயல்வீரர் விருதை முஹம்மது அலிக்கும், சிலம்புக்கலை விருது காஜாமுகைதீனுக்கும் அஞ்சாநெஞ்சர் வழங்கினார்.
No comments:
Post a Comment