Tuesday, March 23, 2010

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அஞ்சாநெஞ்சர் 10 நாள் சுற்றுப்பயணம்

மதுரை மத்திய ரசாயணத் துறை அமைச்சர் அண்ணன் மு.க.அழகிரி மார்ச் 21ம் தேதி முதல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் 10 சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சிங்கப்பூருக்கும் அவர் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

21-ந் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள பாஸ்பேட் சுரங்கத்தை பார்வையிடுகிறார். இந்தியாவிற்கு பாஸ்பேட் இறக்குமதி செய்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பின்னர் நியூசிலாந்து, சிங்கப்பூர் செல்லும் அண்ணன் அழகிரி தனது பயணத்தை முடித்துக் கொண்டு, 31ம் தேதி சென்னை திரும்புகிறார்.

அயலகம் செல்லும் அண்ணனால் தமிழகத்திற்கு நனமை பயக்கும் பல திட்டங்கள் கிடைப்பது திண்ணம்.

No comments: