கோவை வ.உ.சி.மைதானத்தில் இன்று மாலை திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர், தலைவர் கலைஞர் முன்னிலை வகித்து பேசினார்.
செம்மொழி மாநாட்டுக்கு போட்டியாக இங்கு கூட்டம் நடைபெற்றது. அதில் என்னையும், திமுகவை பற்றியும் காரசாரமாக வாயில் வந்ததை பற்றியெல்லாம் பேசினார்கள்.
செம்மொழி மாநாட்டில் ஒரு கழகக்கொடி கூட கிடையாது. நான் பேராசிரியரிடம் இதைச்சொன்னேன். கழக கண்மனிகள் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று நடக்கிறார்கள் என்று சொல்லி வியந்தேன்.
கழக கண்மனிகள் கொடி கட்ட வேண்டாம் என்று சொன்னதால் தலைவரே இப்படி சொல்கிறாரே என்று ஒரு கணம் மனம் புண்பட்டிருப்பீர்கள். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த மன்னிப்பை எந்த வகையில் கேட்டுக்கொள்கிறேன் என்றால்...இனி தாராளமாக கொடிகளைக்கட்டுங்கள். தோரணங்களைக்கட்டுங்கள்.
நம்மை யாரும் வீழ்த்த இடங்கொடுக்கப்போவதில்லை. நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்தினாலும் மீண்டும் எழக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள்.
திமுக என்பது அரசியல் இயக்கம் மாத்திரம் அல்ல. சமுதாய இயக்கம். திமுக நடத்தும் நிகழ்ச்சிகள் எல்லாம் வரலாற்று சுவடுகள்.
என்னுடைய ஸ்தாபனங்களில் உள்ள உடமைகள் எல்லாம் பங்கு பிரிக்கப்பட்ட போது என்னுடைய மனைவிமார்களுக்கு, அழகிரி,ஸ்டாலின், முத்து,தமிழரசு என்று பிரித்துக்கொடுத்துவிட்டேன்.
மிச்சம் இருந்தது கோபாலபுரத்தில் உள்ள வீடு. அதையும் மருத்துவமனைக்கு எழுதிக்கொடுத்துவிட்டேன்.
நான் வீடு,வாசல் பற்றியெல்லாம் என்றைக்கும் கவலைப்படுவதில்லை. நான் சொத்தாக நினைப்பது திமுக கொடிதான். நான் ஆபரணமாக கருதுவது...மிசா காலத்தில் ஸ்டாலினை அடித்து உதைத்து அவர் உடம்பில் வந்த ரத்தம்தான்.
அதைப்போல அழகிரி, முத்து, ஸ்டாலின் ஆகியோரை பலியாக்கிவிட்டுத்தான் திமுகவை வளர்க்க வேண்டும் என்றால் அதைச்செய்வேன். ஏனென்றால் தன்னுடைய மகனையே தேர்க்காலில் இட்டுக்கொன்ற மனுநீதிமன்னன் வாழ்ந்த திருவாரூரைச்சேர்ந்தவன் நான்.
என்னைப்பார்த்து இங்கே ஒருவர் மைனாரிட்டி அரசு நடத்தும் கருணாநிதி என்று சொன்னதாக இங்கே பொன்முடி குதித்தார். தம்பி ராசா குதித்தார். நியாமா என்று தம்பி ஸ்டாலின் கேட்டார்.
நான் கவலைப்படவில்லை. நாம் மைனாரிட்டிக்காக நடத்தப்படுகின்ற அரசு.
அவர் வேண்டுமானால் என்னை கருணாநிதி என்றுசொல்லட்டும். அண்ணாவிடத்தில் பாடம் கற்றவன். அதனால் நான் அம்மையார் என்று சொல்கிறேன்.
கருணாநிதி என்று அந்த அம்மையார் சொல்வது ஒன்றும் தவறல்ல. கருணாநிதி என்றால் கருணை மிகுந்த நிதி என்று அர்த்தம்’’என்று பேசினார்.
No comments:
Post a Comment