சமூக நீதி காத்த வீராங்கனை, வீரர்கள் என்று தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் தறுதலைகளுக்கு மத்தியில் திராவிட இயக்கத்தின் மூதறிஞர் தலைவர் கலைஞரின் சமூக நீதிக்கான இடைவிடாத போராட்டத்தின் இன்னுமொரு முயற்சி.
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வை மறுபர்சீலனை செய்யவேண்டும் என்று பிரதமர், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு தலைவர் கலைஞர் அவர்கள் அவசரக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
"தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று தொழில், மற்றும் மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பொது நுழைவுத்தேர்வு முறை மாநிலங்களின் கல்வி உரிமையில் குறுக்கிடுவதாக உள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு பல்லாண்டு காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த முறையால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியினரின் கல்வி நிலை மிகக்கடுமையாக பாதிக்கக்கூடும்.
எனவே தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
சாமான்யர்களுக்கான சமூகநீதிப்பயணம் தலைவர் கலைஞர் அவர்களின் இடைவிடாத முயற்சியினால் வெற்றி பெற வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment