
எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதியை செலவடுவதில் மத்திய அமைச்சர் அஞ்சாநெஞ்சர் அழகிரியார் முதலிடம் பெற்றுள்ளார்.
மக்களவை எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் தங்கள் தொகுதிக்கு செலவிட ரூ.2கோடி வழங்கப்படுகிறது. அவற்றை முறையாக செலவழிக்க வேண்டும். அந்த வகையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தொகுதியான மதுரைக்கு ரூ.1கோடியே 24லட்சத்தை செலவிட்டு முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் மீரா குமார் ரூ.1கோடியே 19லட்சமும், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் ரூ.1கோடியே, 9லட்சமும், வீரப்பமொய்லி ரூ.1கோடியும், சிதம்பரம் ரூ.97லட்சமும் முறையே செலவழித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்தார் அழகிரி என்று கேட்கும் வீணர்களே!
கட்சிக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவர்க்கும் சேவை செய்து, மக்கள் நலத்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம் என்ற பேரறிஞரின் கனவை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் எங்கள் அஞ்சாநெஞ்சரின் அரும்பணிகள் தொடர தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment