Monday, February 28, 2011

ஏழை, எளிய மக்களின் துணையோடு தலைவர் கலைஞர் 6வது முறையாகவும் முதல்வராவார்.

மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை அடிக்கல் நாட்டு விழா, மதுரை காமராஜ் பல்கலை மாலைநேர பிரிவை பி.டி.ஆர்., பழனிவேல்ராஜன் வளாகமாக அர்ப்பணித்தல், அரசு ஆஸ்பத்திரியின் புதியவிரிவாக்க கட்டடங்களை துவக்கி வைத்தல், 1470 ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துதல் விழாக்கள் நேற்று நடந்தன.திட்டங்களை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் அஞ்சாநெஞ்சர் மு..அழகிரி பேசியதாவது: எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 1.5 கோடிக்கு மாநகராட்சியின் 15 இடங்களில் இன்று உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கப்பட்டது. நான் மதுரை தொகுதியில் செய்துள்ள பணிகள் குறித்து உயர் கல்வித்துறை அரசு செயலாளர் பேசியதை, வாக்களித்த மக்கள் என்னை புகழ்ந்ததாக நினைத்துக் கொண்டேன்.

தமிழகத்தில் எந்த அரசு ஆஸ்பத்திரியிலும் விபத்து உயிர்காக்கும் சிகிச்சை பிரிவு இல்லை. அது மதுரைக்குத்தான் முதலில் வந்துள்ளது. மதுரை காமராஜ் பல்கலை விழாவில் அண்ணா தொழில்நுட்ப பல்கலை மதுரையில் அமையும் என வாக்கு தந்தேன்.

அன்றிரவே சென்னை சென்றபோது, முதல்வரை சந்தித்து பேசினேன். நான் கண்டிப்பானவன் என்பதால் உடனே முதல்வர், உயர்கல்வி அமைச்சர் பொன்முடியை அழைத்து பேசினார். அவர் அரசு செயலர் கணேசனிடம் தெரிவித்து மதுரையில் அமைத்தோம். முதல்வரின் திட்டங்கள் ஏழை, எளியவர்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. அதை அவர்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள். எனவே தலைவர் கலைஞர் அவர்கள் ஆறாவது முறையாக அல்ல ஏழாவது முறையும் அவரே முதல்வராக வருவார், என்றார்.

No comments: