Thursday, March 10, 2011

தந்தையின் வழியில் தனயன்.



கடைக்கோடி தொண்டனின் காவல் அரணாம் அண்ணன் அஞ்சாநெஞ்சரின் அருந்தவப்புதல்வர் அன்பு இளவல் துரை தாயநிதியும் தனது தந்தையை போலவே ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதில் பேரார்வம் உள்ளவராக திகழ்கிறார்.

சமீபத்தில் மும்பையில் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியின் வீடும் தீ விபத்தில் சிக்கியது. இதில் ஆஸ்கர் நிகழ்ச்சியின் போது அவர் அணிந்திருந்த உடை, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.

இந்நிலையில் பந்த்ரா குடிசை தீ விபத்தில் சிறுமி ரூபினா அலியின் வீடு பறிபோனதை அறிந்த தம்பி துரை தயாநிதி அழகிரி, அவரை தேடி கண்டுபிடித்து வானம் படத்தின் ஆடியோ உரிமைபெற்ற வீனஸ் ஆடியோவுக்கு வரவழைத்தார்। பின்னர் ரூபினா அலிக்கு ரூ50ஆயிரம் ரொக்கபணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். இதனை நடிகர் சிம்பு, ரூபினாவிடம் கொடுத்தார்.

சாமானிய மக்களுக்காக சாதனைகள் பலசெய்து சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் பேரனும், கழகத்தொண்டர்களின் காவல் அரண் அண்ணன் அஞ்சாநெஞ்சரின் அருந்தப்புதல்வனுமாகிய தம்பி தாயாநிதி அழகிரியின் மக்கள் நல உதவிகள்
தொடர்ந்து நடைபெற தமிழக மக்களின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.

No comments: